PS1 4.5/5🤍
Positive:
Bookலையும் சரி படத்திலையும் சரி my favourite character நந்தினி தான். ஐஸ்வர்யா ராய் சூப்பர்ரா நடித்து இருந்தா.
வந்தியத்தேவன் நந்தினி அரண்மனை conversation,
வந்தியத்தேவன் குந்தவை boat conversation, குந்தவை சிற்றரசர்கள் சந்திப்பு ரொம்ப ரசித்தேன்.
ஆதித்த கரிகாலன் character book படிக்கும் போது எனக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ஆனா movieல விக்ரம் அட்டகாசம். நந்தினி மேல உள்ள தீராத காதல், நிராயுதபாணிய கொன்ற குற்றவுணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம் எல்லாம் நடிப்புல அழகா கொண்டு வந்து இருக்காரு.
நடிகர் நடிகை தேர்வு அருமை. எல்லாருடைய நடிப்பும் அட்டகாசம்.
பாடல்கள் தரமான சம்பவம்
ஆடை வடிவமைப்பு, background setup செம்ம♥️.
Negative:
PS web series எடுத்தா ஒவ்வொரு charactersக்கும் ஒவ்வொரு episode கொடுக்கனும் அவ்வளவு depth உள்ள characters நிறைய இருக்கு. ஆனா படத்துல மேலோட்டமா charactersஆ தட்டி தூக்கி இருக்காங்க. So, Emotionalல connectஆக முடியல. சோகங்கள்.
5 part உள்ள bookயை 6 hours movieயா எடுக்கும் போது அப்படித்தானு நினைத்து கிட்டேன்.
எனக்கு நந்தினி பிறகு பிடித்த character பூங்குழலி. தைரியமான துறுதுறு sweetie பூங்குழலி.
அவளுக்கு இன்னும் scenes இருந்திருக்கலாம். சோகங்கள்.
Finally:
என்ன இருந்தாலும் பாகுபலி மாதிரி இல்லனு சிலர் சொல்லுவாங்க.
பாகுபலி.. ஒரு ஊரு ஒரு ராஜா கதை. ஒரு main characterற சுற்றி சில charactersஆ வைத்து எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத முழுக்க முழுக்க கற்பனை கதை.
PS நாவல் based பண்ண movie. நாவல்ட coreற maintain பண்ணும். Charactersயை balance பண்ணும், அதே நேரம் நாவலை copy paste பண்ண கூடாதுனு பல கட்டுப்பாடுகள் இருக்கு. அந்த புரிதல் வேண்டும்.