இப்படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்கள் எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் இருந்தார். அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அந்தப் படத்தில் வரும் பஸ் எங்கள் வீட்டின் முன்னால் தான் நிற்கும். வீட்டின் அருகில் உள்ள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்த பஸ்ஸில் தினமும் ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்.இப்பொழுது முன்னணியில் உள்ள அத்தனை நடிகர் நடிகைகளையும் நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம்.அதில் இப்போது பிரபலமானவர்கள் இளையராஜா ,ரஜினிகாந்த் ,கமலஹாசன், ஸ்ரீதேவி நளினிகாந்த் மற்றும் பலர் . அது ஒரு கனாக்காலம் திரும்பவும் வராது.