நான் எனது வாழ்க்கையில் இதுவரை கதை புத்தகமோ அல்லது நாவல்களோ படித்ததில்லை.
இந்த திரைப்படம் ஒரு புத்தகத்தோடு நடைபோட்டு உரையாடுவதுபோன்ற சுகமான அனுபவத்தை அளித்தது.இனி புத்தகம் படிக்கும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படித்தியது.
உறவுகளிடையே உள்ள பாசபிணைப்பை உரையாடல்கள் மூலம் திரையில் உயிரோட்டமாக ஒடசெய்துள்ளனர் கலைகுழுவினர்.
எ.கா :-
கணவன்-மனைவி
மாமன்-மச்சான்
மகன்-சித்தப்பா
அண்ணன்-தங்கை
அத்தான்-அத்தான்
இப்படி சொல்லிகொண்டே போகலாம்…
முக்கியமாக இன்றைய தலைமுறையினர் அறியவேண்டிய இன்றியமையாத வரலாற்று தகவல்களை உரைநடையோடு உணர்ச்சி மாறாமல் படைத்துள்ளனர்.
எ.கா:-
சோழர்களின் வீரம்
ஈழம்…
தூத்துகுடி…
இப்படி சொல்லிகோண்டே போகலாம்…
நான் என்னை மெய்யழகன் என்றே நினைக்கிறேன், அமெரிக்காவில் வாழும் என்னுடைய அருள்மொழியொடு உணர்ச்சிபூர்வமாக அமர்ந்து உரையாடும் காலத்திற்காக காத்திருக்கிறேன்.😍
இக்காவியத்தைபடைத்த முழு குழுவினருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள்.😍