சுழல் - ஆம் இது அதிபயங்கரமான சுழல்.
திரைக்கதையில் மிரட்டிய புஷ்கர் மற்றும் காயத்ரி இணையின் மற்றொரு படைப்பு மிக மிக மிக அபாரம். படத்தை படைத்த பிரம்மா மற்றும் படத்தை அணு அணுவாக செது(இய)க்கியுள்ள அணுசரன் இருவருக்கும் பாராட்டுகள் ஆயிரம்.
ரெஜினாவாக நடித்த திமிர் பி(ந)டித்த ஷ்ரேயா ரெட்டி அம்மையார், சண்(பன்)முக கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் அய்யா, கதை முழுவதும் "சர்க்கரை"யாக இனித்த கதிர் அவர்களின் திறமையை மீண்டும் நிரூபிக்கிறார்கள். துணை கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல பெண்கள் சிறிய வயதில் பாதிக்கப் படுகிறார்கள். முழு நிலாவாக கதையின் தொடக்கத்தில் வந்த - கோபிகா இரமேஷ், இவருக்கு ஜோடியாக நடித்த பிரசன்ன பாலசந்தர் இருவருக்கும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிந்தன் கதாபாத்திரத்தில் வந்த பிரபல நடிகர் இளங்கோ குமரவேல் மயான கொள்ளையில் (குரங்கு) பொம்மையாக நடித்த விதம், வில்லத்தனம் கவனம் ஈர்க்கிரது. ஹரிஷ் உத்தமன் போன்ற பல உத்தமர்களுக்கு இதுபோன்ற குறைபாடு நிஜ வாழ்க்கையில் உள்ளது. பின்னனியில் சாம் சி எஸ் இசை கதையில் பலம் பெறுகிறது. சந்தான பாரதி ஐயாவின் புலனாய்வு மேலும் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் நலம். ஒருவேளை கதையின் பால் ஆர்வம் அதிகம் ஏற்படுவதால் பொறுமை காக்க தவறினேனோ என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக சுழலில் சிக்கி இறுதிவரை போராடி நலமாக வெளியேறினேன், கதை அத்துடன் முற்றுப் பெற்றதால்.