விக்ரம்
பழையன கழிதலும் புதிய புகுதலுமாக, இயக்குநர் நடிகர்கள், இசையமைப்பாளர் வரை புதியவர்களுடன் கமல்.
விஐய் சேதுபதி - உடம்புக்கேற்ற அபார நடிப்பு; பல்லுக்குள் போதை மருந்தை வைத்து சிங்கமாக சிலிர்க்கும் போது பயத்தில் நாங்களும் தான்.
பகத் பாசில் - அடிக்கடி மலையாள படம்களில் நடிப்பால் மிரட்டி இருந்தாலும், நிறைய சத்தம் இல்லாமல் காரமான நடிப்பு
அனிருத் - நிறைய படம்களில் Aniruth Musical என்று பொட்டு வைத்திருந்தாலும், இந்த படம் நிஜமாகவே "Aniruth Musical" திருவிழா
கிரிஷ் கங்காதரன் - படம் முழுக்க நிறைய இரவு காட்சிகள் இருந்தாலும் ஒரு இடத்தில கூட உறுத்தாமல், அவரவர்களின் முக அமைப்புக்கு ஏற்ற வாறு அமைத்த கோணங்கள்,
லோகேஷ் கனகராஜ் - முதல் பாதியில் standared Car ஓடுவது மாதிரி முதலாவது gear இல் ஓடி கதாபாத்திரம்களை ஒவொன்றாக அறிமுகப்படுத்தி இரண்டாம்பாதியில் நான்காவது gearக்கு அப்படியே தாவுகிறது, மிகவும் புத்திசாலி தனமான திரைக்கதை அமைப்பு, "விக்ரம் 1986" அப்படியே கதைக்குள் இணைத்தது இன்னும் விஷேசம், சூர்யாவின் இணைப்பு உட்பட.
கமல் - திரை முழுவதும் விழும் ஆளுமை, இப்படி ஒரு கமலை பார்த்து நிறைய நாளாகி விட்டது, அடிக்கடி Big Boss இல் அதே தாடியுடன் பார்த்த முகம் என்றாலும், திரையில் இன்னுமொரு ரூபம் , இவ்வளவு புதியவரக்ள் இருந்தும் கமல் திரையில் தனது நடிப்பாலும் அனுபவத்தாலும் சொன்னது "பார்த்துக்கலாம் "