இப்படி கண் விழித்து படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன....
படத்தை பற்றிய உணரவ்களை பகிர்வதற்கு முன்பு உலக நாயகன் கமல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து பாபநாசம் 2 எடுத்து இதை நாசம் செய்ய வேண்டாம் .
மோகன்லால் போன்ற ஒரு நிறைவான நடிகர் இனி கிடைப்பது அரிது. கதாபாத்திரமாக படம் முழுவதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் .( அப்படி வாழ்ந்து நடிப்பது அவருக்கு புதிது இல்லை)
காட்சிக்கு காட்சி டுவிஸ்ட், ஒரு சீன் கூட சலிப்பு தட்ட வில்லை - மிக துல்லியமான திரைக்கதை , காட்சி அமைப்பு, ரீ ரெக்கார்டிங், கதாபாத்திர தேர்வு .
ஒரு நாவல் படித்த உணர்வு .... இதற்கு முழு காரணம் கதையின் நாயகன் லால்யேட்டன் தான் . அப்படி ஒரு இயல்பான நடிப்பு
இந்த உணர்வு கடைசியாக அண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.2 பார்த்த அன்று வந்தது இன்று வரை இருக்கிறது
அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் ....
வாழ்க லால்யேட்டன்