ரஜினியின் இரண்டு வித்தியாசமான வேடங்கள் அற்புதமாக நடித்திருந்தாலும் , உண்மையிலேயே படத்திற்கான பெருமை ஸ்ரீதேவியையே சேரும் .குடும்பபாங்காய் அமைதியாகவும் , பாசம் காட்டவேண்டிய இடத்தில் பரிவாகவும் , தன் காதலை நிராகரித்த ரஜினியிடம் கோபமும் பிறகு சமாதானம் ஆனபின் குழந்தை தனத்துடன் பேசி 'நான் அப்படித்தான் பேசுவேன் என பிடிவாதம் பிடிப்பதிலும், ஸ்ரீதேவி நவரசத்தை பிழிந்திருப்பார். கதை அமைப்பு , பிண்ணனி இசை , பாடல்கள் அனைத்தும் படு சூப்பர் .இன்றைய இளைஞர்களையும் பார்க்கத்தூண்டும் அற்புத திறைக்காவியம் .ஸ்ரீதேவிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் இப்படத்தை பார்க்கலாம் .