வாழ்நாள் முழுவதும் வலி, அவமானம், ஏமாற்றம் சுமந்தே கூன் விழுந்த எளிய மக்கள், அதன் எல்லை தாண்டிய கணத்தில் வெகுண்டு எழுந்த கதை.
வாசிக்கும் பொழுதிலேயே
இப்படியும் வாழ்க்கை வாய்த்திருந்ததே என்று
வலிக்க வைத்த கதை.
கதை நெடுக கூகை ஒரு குறியீடாகி,
அதன் மொழியிலேயே மௌனித்த கதை.
இனி எங்கேனும் கூகையை பார்க்க நேர்கையில், நின்று பரிவு காட்டி யோசிக்க வைக்கும் கதை.
வாசிப்போம்.
கூகையையும் நேசிப்போம்.