கமலி from நடுக்காவேரி.
இன்று ஸீ சினிமாவில் இந்த படம் பார்த்தேன்.
மிக மெல்லிய உணர்வுகளை அடிப்படையாக கொண்டு பெரும்பாலும் தமிழில் திரைப்படங்கள் வருவதில்லை.
அதிலும் நடைமுறையில் இல்லாத பிரச்னைக்காக இரத்தம், சதை, அரிவாள், துப்பாக்கி அல்லது பாலியல் உணர்வே வாழ்க்கையின் இலட்சியம் என காண்பிக்கும் குப்பைகளே தமிழ் சினிமா என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.
இப்படம் தனி மனித தம்பட்டம், வன்முறை பொருக்கித்தனம், இலக்கில்லாத வாழ்க்கை முறை, என தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் காண்பிக்கும் மூன்றாம்தரத்திலிருந்து மேம்பட்டு அறிவையும், கல்வியையும் கொண்டாடுகிறது.
இதனிடையில் இப்படிப்பட்ட சிறப்பான படங்களும் வருவது, இன்னும் இரசனையான டைரக்டர்களும் கண்ணாடிக் கற்களினிடையே வைரங்களை தைரியமாக தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்களும் உள்ளனர் என்பது மகிழ்ச்சி.
இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.