அனுராக் காஷ்யப் இன் முந்தைய படங்களிலிருந்து மிகவும் வேறு மாதிரியான லேசான படமாக உருவாகியுள்ளது இந்த படம். மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து பணத்தை நகர்த்தியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது அதுபற்றிய கதை அல்ல ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்மணி சரியான வேலை இல்லாத அவரது கணவன் பள்ளி செல்லும் குழந்தை வாடகை வீடு, கடன் தொல்லைகள் என இருந்தாலும் அவளது குடும்பத்திற்காக வங்கியில் பணிபுரிகிறார்..
எதிர்பாராத விதமாக தனக்கு கிடைக்கும் பணம் ஒருகட்டத்தில் அதிகமாக சேர்ந்ததும் திடீரென பணமதிப்பிழப்பு நிகழ்கிறது அதை கஷ்டப்பட்டு மாற்ற வேண்டும் என செல்லும் இடத்தில் நிகழும் பிரச்சனையால் இவளது தலைக் உருண்டு விடுமோ எனக்கு தோன்றுகிறது. ஆனால் கிளைமாக்ஸ் வேறு..
சரிதா கதாபாத்திரத்தில் நடுத்தர வர்க்கத்து பெண்மணியாக சிறப்பாக நடித்துள்ளார் அவரது கணவனாக நடித்துள்ள வரும் அருமையான நடிப்பு இவர்கள் இருவரையும் சுற்றிதான் கதை நிகழ்கிறது. அவர்கள் வீட்டிற்கு கீழ் இருக்கும் தாய் வீடு, அதற்கு கீழ் இருக்கும் அவரது நண்பர் வீடு, சுஷாந்த் வீட்டுக்கு மேல் இருக்கும் அரசியல்வாதியின் பிஏ வீடு இவை மட்டுமே படத்தின் கதை நிகழும் இடங்கள். மேலும் சரிதா பணிபுரியும் வங்கி...