கதை, திரைக்கதை இரண்டும் படத்திற்கு பெரிய பலம். எந்த இடையூறுகளும் விலகல்களும் இல்லாமல் மிக நேர்த்தியாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஊடகங்களின் தற்போதைய பொறுப்பற்றதனத்தை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள். கைப்பேசி எப்படியெல்லாம் தவறாக உபயோகப்படுத்தப்படுவதற்கு ஒரு உதாரணம்: நீதிமன்ற விசாரணைக்கூடத்திற்கு வெளியே அமர்ந்திருக்கும் கதாநாயகியை பக்கத்தில் காவலுக்கு இருக்கும் காவலர் ஒருவர் அவருக்குத் தெரியாமல் படம் பிடிக்கிறார். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். சாய்பல்லவிக்கு தேசிய விருது வாங்கித் தரப்போகும் படம்.