தமிழர்களையும், தமிழினத்தின் மரபுகளையும், ஈழத் தமிழர்களையும் கொச்சைப்படுத்தி அமைக்கும் காட்சிகள், அகதிகளாக சென்று குடியேறி குடியுரிமை வாங்கிய தமிழர்களை தீவிரவாதிகள் போலவும், தமிழ் ஈழ புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செய்யும் தொழிலை மறைமுகமாக ஆயுதம் கடத்தும் தொழிலாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள், தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தும் காட்சி அமைப்புகள், தமிழ்நாட்டில் சாதியப் பாகுபாடு இனப்பாகுபாடு நிற வேறுபாடு உள்ளது என்ற காட்சியமைப்புகள், தமிழகத்தில் உள்ள பிற மொழிகள், மார்வாடிகளை அடித்து துரத்துவது போல காட்சிகள் அமைத்து தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்த திரைப்படம் முற்றிலுமாக பிற மொழியாளர்கள் எடுக்கப்பட்ட தமிழர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் என்ற ஒரு பிற மொழியாளர் ஆல் உருவாக்கப்பட்ட படம்.
தமிழர்களையும் ஈழப் போரில் பாதிக்கப்பட்ட அகதிகளையும் பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து குடியுரிமை வாங்கிய தமிழ் சொந்தங்களையும் இழிவுபடுத்தும் படம் முற்றிலுமாக இதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.