மிகச்சிறந்த குடும்ப சித்திரம்...
இக்காலத்திலும் ஒரு சில இடங்களில் பெண்களின் குடும்ப கஷ்டங்களை அல்லது குடும்ப பாரங்களை பங்கிட்டுக் கொள்ளாத ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
இந்தப்படத்தில் தனது மாமனாருக்கு மருமகள் ப்ரஸில் பேஸ்ட் வைத்து தருவது...
செருப்பை தான் வெளியில் செல்லும்போது மருமகள் எடுத்து தர வேண்டும் என மாமனார் எதிர்பார்ப்பது..
மாமனாரின் உள்ளாடைகளை மருமகள் கையால் துவைப்பது..
தனது சுய தேவைக்கு மனைவியை பயன்படுத்திக்கொள்ளும் கணவன் அவளின் மாதவிடாய் காலத்தில் தீண்டத்தகாதவளாய் அவளை பார்ப்பது.. ஹோட்டலில் டேபிள் மேனர்ஸ் பார்க்கும் கணவன் வீட்டில் டேபிளில் துப்பி வைப்பதைப்பற்றி மனைவி கேட்கும் நேரம் அது என் வீடு நான் வாங்கிய டேபிள் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்று கூறும் கணவன் மூலம் ஆணாதிக்கம் வெளிப்படுகிறது. ஆனால் அதனை துடைத்து சுத்தப்படுத்துவது யார் என அந்த கணவன் சிந்திப்பதில்லை...
ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்கள் தங்கள் வீட்டின் சமையலறை எவ்வாறு இருக்கிறது என பார்த்து அங்குள்ள தேவைகளை நிறைவேற்ற வேண்டும்..
பெண்கள் வெறும் வீட்டு வேலைக்காக திருமணம் செய்துகொண்டு வருபவர்கள் அல்ல... வீட்டு விசயங்களில் ஆண் பெண் இருவருக்கும் சம பங்கு உண்டு... மத ரீதியாக பார்ப்பவர்களுக்கு இந்த படம் பிடிக்காது... குடும்பம் என்ற இடத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு இந்த படம் மிக பிடிக்கும்...