அருமையான படம். அழகான திரைக்கதை. நேர்த்தியான இயக்கம். ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல படம் பார்த்த மன திருப்தி.
எனக்கு இப்போ 47 வயசு ஆகுது. இந்த படத்துல வர்ற பசங்களை பாத்தப்போ சின்ன வயசுல என்னையே பாத்த போல இருந்துச்சு. வாடகை சைக்கிள் எடுத்து குரங்கு பெடல் அடிச்சி ஓட்டியது, கீழ விழுந்து அடி பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிட்டா கடை கார அண்ணன் கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சது, ஒருவேளை பஞ்சர் ஆயிட்டா நைசா அவருக்கு தெரியாம சைக்கிளை விட்டுட்டு ஓடி வந்தது. சைக்கிள் டயரை குச்சி வச்சி அடிச்சி அடிச்சி ரேஸ் ஓட்டியது. ஸ்காலர் ஷிப் ல கிடைச்ச 150 ரூபாய் ல என்னோட முதல் சைக்கிளை வாங்கியது னு பல நினைவுகள் மனசுக்குள்ள வந்து போச்சு.