கடந்த 27/09/2020 அன்று ஒளிபரப்பான "தமிழா தமிழா" வில் அம்பேத்கர் குறித்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்."அருமை,அற்புதம்".என் கண்ணும்,காதும்,மனதும் அன்றுதான் இனிமை பெற்றது. பாராட்ட வார்த்தைகள் தமிழில் எனக்குத் தெரியவில்லை.அதனால்"சபாஷ்"என போட்டுக் கொள்கிறேன். ஆஹா.அறிவாளிகள் ஒன்று கூடி ஒரு மாநாடு நடத்தியுள்ளார்கள். உலக வரலாற்றை எவ்வளவு ஆழமாகப் படித்து,சிந்தித்து உயர்ந்துள்ளார்கள் என எண்ணி வியப்படைந்தேன்.இந்திய எதிர்காலத்தை மாற்றத்துடிக்கும் துணிச்சல் தலைவர்களாக அவர்களைக் கண்டேன்.இனியொரு விடியல் விரைவில் பிறக்கும். திராவிடம் அதை பறைசாற்றும்.அன்றைய கருத்தாடலில் கூச்சலில்லை,எதிர்ப்பில்லை.அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஆழ்ந்து ஒருவரின் கருத்தை ஒருவர் கூர்ந்து கவனித்தனர்.விவாத மேடைகளின் "இடி மின்னல்கள்"எப்படி அமைதியாய் அறிவார்ந்த உண்மை பேசினார்கள்.சமுதாய நலனில் அவர்களின் ஆர்வத்தை தெரிந்து கொண்டேன்.அம்பேத்கரை பாட புத்தகத்தில் மட்டும் அறிந்த என்னைப் போன்றவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி இது.படித்த அறிவாளிகளின் இது போன்ற வட்டமேசை மாநாடுகள் இனிமேல் அடிக்கடி கூடவேண்டும்.வளரும் சமுதாயம் அதைப் பார்க்க வேண்டும். நல்ல முயற்சி.வாழ்த்துகள். அன்புடன். து.கேசவமூர்த்தி.கவுந்தப்பாடி.பவானி வட்டம். ஈரோடு மாவட்டம். 638455.