ராஜஸ்ரீக்கு நடிப்பே வராது. ஜெமினியுடன் கள்ளக்காதல் இருந்ததால் அவருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் தான் ராஜஸ்ரீ. பாலச்சந்தர் முன்கோபி. அவரிடம் நல்ல குணங்களும் இருந்தன ...கெட்ட குணங்களும் நிரம்பி இருந்தன. பிரமிளாவின் திரையுலக வாழ்க்கையைத் தரை மட்டம் ஆக்கிய பெருமை அவரையே சாரும்.
அரங்கேற்றம் படத்திற்கு முன்னர் பிரமீளா 1973 வருடம் கமல் ஹாசன் மற்றும் ரோஜா ரமணியுடன் "பருவ காலம்" என்ற படத்தில் விபச்சாரியாக நடித்து இருந்தார். ஆனால் அரங்கேற்றத்தில் திறம்பட நடித்த பிரமீலாவுக்கு பின்னர் பாலச்சந்தர் வாய்ப்புத் தரவேயில்லை. ஏன்? இதற்கு அமெரிக்காவில் இருக்கும் பிரமீளா தான் பதில் கூற வேண்டும். ஆனாலும் பிரமீலாவின் பெருந்தன்மை என்னவென்றால் அவர் இன்னமும் பாலச்சந்தருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
அரங்கேற்றத்தில் விபச்சாரியாக நடித்த பிரமிளா பின்னர் எல்லா படங்களிலும் அதே விதமான பாத்திரங்களையே ஏற்று நடித்தார். ஆனால் அவர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை அவர் தந்தை வணிகம் செய்கிறேன் பேர்வழி என்று விரயம் பண்ணினார். பிரமிளாவின் வாழ்க்கையை வைத்து தான் சுஜாதா - அன்புள்ள அப்பா என்கிற நாடகம் எழுதினார் . பத்தாம்பசலி ஓடாததற்கு நாகேஷின் அதே மாதிரியான நடிப்பும் சலிப்பு தட்டும் பாலச்சந்தரின் திரைக்கதை திருப்பங்கள் தான் காரணம் என்றே எண்ணுகிறேன்.