சக்கரங்களினூடே நசுங்கிச்சாவும் பட்டாம்பூச்சிகளை நம் ருசிகர நெடுஞ்சாலை பயணங்கள் அலட்சியப்படுத்தும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நாம் நசுக்கும் அடித்தட்டு மக்களும் அவ்வினமே.
நாட்டின் வளர்ச்சி எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதே இல்லை. அதுவே உலக வரலாறு. அதுவே இன்றும் நம் கண்முன்னே நாம் காணும் அவலங்களுக்கும் அடிப்படை காரணம்.