இந்த புத்தகம் நான் படித்ததில் சிறந்த புத்தகம் ..
கதையில் வரும் கதாபாத்திரங்கள் அவற்றின் பெயர்கள் அனைத்தும் சரித்திர பெயர்களை கொண்டது.
ஆசிரியர் பல்வேறு சரித்திர ஆதாரங்களை கதைக்கு தக்கவாறு அடிக்கொடிட்டு காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்வதால் வசிப்பவருக்கு கதை மட்டும் அல்லாமல் அந்த கல்வெட்டிட்டு ஆதாரங்கள் பல உண்மைகள் அந்த காலத்தில் கடைபிடித்துவந்த சொற்கள் என பல செய்திகள் தெரிய வருகின்றன.இவற்றுடன் வரைபடங்களை இணைத்துலர் அது மேலும் வாசகர்களுக்கு புரிதலை ஏற்படுத்துகின்றது.
கற்பனையை குறைத்து சரித்திர ஆதாரங்களை அதிகம் பயன் படுத்தியதிக்காக ஆசிரியரை பாராட்டவேண்டும்.