திரைப்படத்தின் ஒவ்வொரு படைப்பிலும் மெய்சிலிர்க்கிறேன் இன்று 2023 ஒவ்வொரு இளைஞர்களும் அனுபவிக்கின்ற சூழ்நிலைகளை அன்றே அனுபவத்தில் இருக்கிறார் இயக்குனர் ராம் அதை திரைப்படமாக நம் முன் காட்சிப்படுத்துகையில் மெய்சிலிர்க்கிறேன் என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் அலைகள் ஆடுகின்றன ஏனோ.
ஏழு வயதில் கள்ளம் கவடம்அறியா வயதில் வந்த காதலை கடைசி வரை நிலைநாட்டுகிறார் இப்படத்தில் எதையும் கதையாக பார்க்க முடிவதில்லை ஒரு காவியமாக தெரிகிறது தமிழ் எம். ஏ.,
தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்ற துறைகளை பின்னேக்கி தள்ளியது ஒரு கால் மட்டும் வீங்கியது போன்றே இன்றைய சமூகம் நிலவுவதை கண்டு பிரபாகரனின் நிலைப்பாடு ஒவ்வொரு இளைஞருக்கும் வந்து தான் போகிறது.
நன்றி
சுமன் ராஜேந்திரன்