விஷாலின் "ரத்தினம்" முழுநீள ஆக்ஷன் திரைப்படம் என்றாலும்,
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை
எந்தவொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் கதையை அழகாய் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.
கதையின் கரு நாட்டில் அங்கங்கே
மக்களின் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை பற்றியது.
கதையோடு ஒன்றிய நகைச்சுவை
தேவைக்கேற்ப சேர்த்திருக்கிறார்கள்.
நாயகன் விஷாலுக்கு படத்தில் நாயகி இல்லாமல் போனாலும் அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றமில்லாத கதைக்களம்.
சமுத்திரக்கனி வழக்கம் போல் அவரது நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
யோகிபாபுவின் நக்கல் நையாண்டியும் அருமை
ஒருசில இடங்களில் யாரையோ குறிவைத்து வசன தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ரத்தினம் திரைப்படம் விஷாலுக்கு கிடைத்த ரத்தினம் தான்