அன்னபூரணி சினிமா விமர்சனம்
ஶ்ரீரங்கம் பெருமாளுக்கு தளிகை செய்பவர் மகள் இந்தியாவின் தலை சிறந்த சமையல் நிபுணர் ஆக முயல்வது ஒரு வரிக் கதை.
புதுமையாக கதை சொல்லவில்லை. வழக்கமான....
இனிமையான ஆரம்பம் - முடிச்சி - வில்லன் - அதிசய நிகழ்வு - சுபம்.
படத்தின் ஊடே கார்ட்டூன் தொடர் உண்டு. இது copt cat என்றாலும் எடுபடவில்லை. நிறைய செலவு செய்ய வேண்டும்.
கிளைமாக்சில் வரும் போட்டியில்
அடுப்பு இல்லாமல் சமைப்பது தவிர மற்றது போர்.
பிரியாணி சமைக்கும் போது பர்தா, பரிசு வாங்கும் போது அப்பாவை அழைப்பது, சுவை திறன் இழக்கும் போது நயன்தாரா நடிப்பு என எமோஷனல் காட்சிகள் உண்டு.
காமெடி எடுபடவில்லை.
நயன்தாராவுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் சுண்டு விரல் சமாச்சாரம்.
அச்சுத் குமார்,ரவிகுமார்,சச்சு நன்று.
சத்யராஜ் நிறைய களைப்படைந்த மாதிரி...
கார்த்திக் முகம் சலிப்படைய வைக்கிறது.
நயன்தாரா - சிவா மேஜிக் தொடருகிறது.
இசையை பற்றி பேசாமல் இருப்பது நலம். ஒளிப்பதிவு ஶ்ரீரங்கத்தில் நன்று.
எடிட்டர் இன்னும் உழைத்து இருந்தால்
படம் மொறு, மொறு வென (crispy)
French president, புறநானூறு சமையல் - காதில் பூ.
நயன்தாரா,சிவா இணைய விடாமல் பூசி மெழுகுவது டைரக்டர் பயத்தை காட்டுகிறது.
படத்தை முடிக்காமல், கருத்து சொல்லுகிறேன் என்று சமூக சேவை,
பெண் சக்தி உயர்த்துதல் என்பதெல்லாம் வேண்டாத வேலை.
செலவு அதிகம் செய்யாமல் (நயன்தாரா சம்பளம் தவிர) எடுத்திருபதால் கையை கடிக்காது.
முடிவாக,
ஒரு தரம் பார்க்கலாம்.
2.5/5
தங்கராஜ்.
தயவு செய்து உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.
நன்றி.