கிரிக்கெட்..
ஸ்கூல் லீவ் விட்டாச்சா, ஃபிரண்ட்ஸ் ஒன்னு சேர்ந்தாச்சா, ஊருல டோர்ணமெண்ட் நடக்குதா, வேர்ல்ட் கப், டி20 சீசன் வந்துடுச்சா... இப்படி எல்லா வயசுலயும், எல்லா நாளுக்குமாய் கிரிக்கெட் மோகம் பட்டி, தொட்டில இருந்து, சிறுசுல இருந்து பெரிசு வரைக்கும் யாரையும் விட்டு வைக்கவில்லை..
எவ்வளவோ ஸ்போர்ட்ஸ் இருந்தாலும் கிரிக்கெட்கு மட்டும் ஏன் இவ்ளோ ஃபேன்ஸ்? ஏன் இப்படி பைத்தியம் புடிச்ச மாதிரி தூங்காம கூட உக்காந்து பார்க்கனும்? சாப்பிடாம கூட ஏன் அந்த வெயில்ல போய் விளையாடனும்? அப்படி அதுல என்னதாண்டா இருக்கு? உனக்கு நான் முக்கியமா இல்ல இந்த கிரிக்கெட் முக்கியமா? கிரிக்கெட்டா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகுது? அப்படி அடிச்சுகிட்டானுங்க இப்ப கிரிக்கெட்னதும் ஒன்னு சேர்ந்துட்டானுங்க.... இப்படியான பேச்சுக்களை நாம் எல்லோரும் கடந்து வந்திருப்போம்..
எந்த ஒரு விளம்பரமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் சத்தமில்லாமல் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறதெல்லாம் ரொம்ப அரிது..
எண்டெர்டெயிண்மெண்ட்கு என்ன வேணுமோ எல்லாமே இந்த படத்துல இருக்கு... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.. 👌🏻👌🏻👏🫰🏻