ஆணவம் சூது மனிதனின் அடிப்படை குணம். தன்னைவிட தாழ்ந்தவனை கீழ்மைப்படுத்தி பார்ப்பதும் இரண்டாம் நிலையில் வைப்பதும் மனிதப் பிறவி குணம் .
உதாரணம் ஒரு குடும்பத்தில் உள்ள கட்டமைப்பில் கூட பெரியவன் சிறியவன் கணவன் மனைவி என்ற உறவுகளில் ஆணவம் ஓங்கி நிற்போர்.. குறைந்த வலிவு உள்ளவரை அடிமைப்படுத்தி ருசி கண்டு கீழ் நிலையில் வைப்பது மனித குணம்.
ஆனால் குழுக்கள் குழுக்களாக , இனங்கள் இனங்களாக இன்றும் அப்படி நிகழ்ந்து கொண்டிருப்பதை அந்த அடிப்படை கீழ்த்தரமான மனித குணத்தை வெளிக்கொண்டு வரும் படம் 'மாமன்னன்' . இப்படி படங்கள் அதிகம் வர வேண்டும்.
கீழவன் என்று கூறப்பட்டவன் தான் கீழ்மையானவன் என்ற மாயையை மறந்தும்.. மேலோன் என்று அறியப்பட்டவன் தான் மேன்மையானவன் என்ற மாயைமை மறந்தும், அனைத்து உயிர்களும் சமம் என்ற நிலை வருவதற்கு காலமாகும்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் காலம் கையில் இருந்தும் ... உயர்வு தாழ்வு என்ற உருவகம் இன்னும் மனித மனத்தில் மட்டும் இருக்கிறது . அது மாறும் . காலதாமதம் ஆகும். இன்னும் அதிகமாக நல்லோர் மற்றும் பலம் உள்ளோர் அதற்காக பாடுபட வேண்டும். சாமான்ய மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும்.
நிரந்தரமாக பரஸ்பரம் மனக்காயங்கள் ஏற்படுத்தாத உடல் வலிகள் ஏற்படுத்தாத சமநிலை போன்றதொரு நிலை வரும் . கொஞ்சம் நேரம் எடுத்து... வரும்.
ஆனால் வரும்.
அறிவியல் வளர்ச்சிக்கு நன்றி கூறுவோம்.
AB
30.06.2023.