அர்ஜுனா விருது பெற்ற ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கைபற்றிய படமாகவோ, அல்லது சாதி அரசியல் கொண்ட படமாகவோ கடந்து செல்ல முடியவில்லை.
ஒவ்வொரு ஏழை, எளிய மனிதனும் மேலேற முயற்சிக்கும் போது,
இந்த சமூகம் அவனுக்கு தடையாக பல்வேறு “வேலிகளை” போடுகிறது.
அவனது பயணம் — அந்த வேலிகளை உடைத்து, வலியை தாங்கி, வழியைக் காணும் போராட்டமாகத்தான் உள்ளது
அத்தனை வேலிகளையும் கடந்து அவன் உயர்ந்தால் கூட ,
அவனுடய வெற்றி சிறியதோ பெரியதோ , இந்த சமூகமும் உறவும் அந்த வெற்றியை பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.
“அவன் அடுத்தவன் காலை பிடிச்சு மேல வந்தான்”,
“அவன் பிச்சை எடுத்து தான் மேல வந்தான்”,
“அவன் ஒதுக்கீடுல தான் வந்தான்” —
இப்படியே சொல்லிக்கொண்டே தான் இருக்கும்
ஆனால் இந்த படம், அந்த குற்றச்சாட்டுகளைக் குறித்து அல்ல —
அந்த வேலிகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் மனத்திறன் பற்றி.
இங்கு வேலிகளை ஓடைச்சிக்கிட்டு ஓட தான் முயற்சிக்கிறோம், நல்லது ஓடுவோம்..
முடிஞ்சா வேலி போட்டு அடைக்க முடியாத தூரத்துக்கு ஓடுவோம் என்று சொல்லும் படமாக தான் பார்க்கிறேன்.
இது சாதி படமாக பார்க்க வேண்டாம். நலிந்தவர்கள் வேலியை உடைக்க எவ்வளவு கஷ்டப்படுறங்கானு பார்ப்போம் ,
முடிஞ்சா நம்ம யாருக்கும் வேலி போடாம இருப்போம் .