நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை பார்த்த திருப்தி. அருமையான இயக்கம். சிறந்த கதை. நடிகர் சூர்யாவின் பரிபூர்ண நடிப்பை இத்திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது. அனைத்து நடிகர்கள் தேர்வு மிக அருமை. ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாக செதுக்கிய இயக்குனர் குழுவிற்கு மனதார வாழ்த்துக்கள். உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதியும்,அவர்களுடைய நிலையை பார்க்க நேர்ந்த பொழுது கண்களில் கண்ணீர் வர நேரிட்டது வாழ்த்துக்கள் .ஜெய் பீம்