வழக்கமான படங்களில் இருந்து தனித்துவத்தை காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி வெற்றியும் அடைந்து இருப்பது தான் ஆச்சரியம். அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக்கை தெருக்கூத்து பாடல் மெட்டி கிட்டத்தட்ட 12 நிமிடங்களில் "கூத்து கட்ட வந்தேன் கூத்து கட்ட வந்தேன் எனத் துவங்கி.......காசு பணம் தேவையில்லை, பிரம்மாண்டம் தேவையில்லை கலையோட கதை பேசுங்கலேன். எனக்கூறி தங்களுடைய வேதனைகளை தெருக்கூத்து கலைஞர் மற்றும் நாடக கலைஞர்கள் இருவர் சேர்ந்து கூறுவதைப் போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சி மிக மிக மிக அருமையாக வந்துள்ளது...
என் பெயர் ஆனந்தன் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் Sridhar Venkatesan வாழ்த்துக்கள் அண்ணா ...