Poetry in Celluloid என்பார்களே, அது போன்ற திரைப்படங்கள் வெகு அரிதாகவே காண வாய்க்கின்றன!
பொழுதுபோகாமல், கைபேசியில், பல OTT தளங்களை மேய்ந்து கொண்டிருந்த போது, அகஸ்மாத்தாக, அமேசான் ப்ரைமில், இந்தத் திரைப்படம் கண்களில் பட்டது!
ஸ்டார் கேஸ்ட் - பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், எஸ் ஏ சந்திரசேகர், டெல்லி கணேஷ் - பார்த்து விட்டு, சரி, பார்க்கலாம் என்று பார்க்கத் தொடங்கினேன்!
'கருமேகங்கள் கலைகின்றன' என்று படம்! தங்கர் பச்சான் இயக்கியது!
ஏற்கனவே, இவரது 'அழகி' மற்றும் 'ஒன்பது ரூபாய் நோட்டு' படங்களை பார்த்து வெகுவாக ரசித்திருக்கிறேன்!
இந்தப் படமும் - காமிராக் கவிதை!
மோசமான நடிகர்களை இயக்கி, இயக்கி, எப்படியெல்லாம் நடிக்கக் கூடாது என்ற அனுபவப்பாடம் இருப்பதால், இந்த இயக்குனர்கள், நடிக வேடம் பூணும் போது, நன்றாகவே நடித்து விடுகிறார்கள்!
அதேபோல, மற்ற திரைப்படங்களில் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றும் யோகிபாபுவைக் கூட, இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடிக்க வைத்திருக்க முடிகிறது, தங்கர் பச்சான் அவர்களால்!
பாடல் வரிகளும் அர்த்தம் பொதிந்தவை!
உறவுகளின் அருமை புரிந்தவர்களும், புரியாதவர்களும் தவறாமல்
பார்க்க வேண்டிய படம்!
வாழ்த்துகள், இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களே!