பள்ளி பருவங்களில் நான் பார்த்து பாரவசமான ஓர் காவியம் "அழகி". அப்போது பள்ளி பருவங்களில் நடப்பதை மட்டுமே பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விபரம் தெரிந்து இப்படம் பார்க்கும் பொழுது முழுமையாக புரிந்து கொண்டேன்.
சொல்லாத அளவிற்கு மனதை கிழித்து உள் சென்று விட்டது. இன்னும் இப்படம் பார்க்கும் பொழுதெல்லாம் கொத்து நெருஞ்சி முள் குத்திக்கொண்டே தான் இருக்கிறது.