எங்க வீட்டு மாப்பிள்ளை இயக்குனர் பொது அறிவு இல்லாதவர் போல தெரிகின்றது. இந்த நிகழ்ச்சி லைவ் நிகழ்ச்சி இல்லை.ஏற்கனவே ஒவ்வொரு எபிசோடும் முன்னதாக படப்பிடிப்பு செய்து எடிட் பண்ணி தான் ஒளி பரப்புகிறார்கள்.கலந்து கொண்ட பெண்கள் பதினாறு பேரில் ஒரு சிலர்தான் தமிழில் பேசுகிறார்கள் .அநேகமாக ஆங்கிலம் தான் அதிகமாக பேசுகிறார்கள்.நிகழ்ச்சியோ தமிழ் நிகழ்ச்சி.பார்ப்பவர்கள் தமிழ் மொழி தெரிந்தவர்கள்.அப்படி இருக்கையில் நிகழ்ச்சியின் இயக்குனர் ஆங்கில வசனங்களை தமிழில் மொழி பெயர்த்து நிகழ்ச்சிக்கு கீழே ஸ்லைடு ஆக ஓடவிடவேண்டும்.அப்போது தான் பார்ப்பவர்களுக்கு என்ன பேசுகிறார்கள் என்பது புரியும். நிகழ்ச்சியும் ரசிக்கும்.கனடாவை சேர்ந்த சுசானா பேசுவது சுத்தமாக புரியவில்லை.வாய்க்கு உள்ளே பேசுகிறார். வார்த்தைகள் வாயை விட்டு வெளியே வந்தால் தான் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் புரியும்.
எல்லாம் போகட்டும்.இந்த நிகழ்ச்சியை ஒளி பரப்பும் கலர்ஸ் தமிழ் சேனல் கூடவா மொக்கையாகிவிட்டது.நம் சேனல் ஒளி பரப்பை உலகம் முழுவதும் பார்க்கிறார்கள் என்ற நினைப்பு கூட தெரியவில்லையா ? கேளுங்கள் இலவசமாக ஆலோசனை தருகிறேன்.
rowdy.not suitable for Arya. Susanna divorcee not suitable for Arya.
1.kunju( Rajalakshmi)
2 agartha.
Other four waste.