நான் பாகம்1 முதற்கனல், பாகம் 2 மழைப்பாடல் Amazon Kindle மூலம் வாங்கிப் படித்தேன். விவரிக்க முடியாத அதி அற்புத காவியமாக இருந்தன. நான் சிறு வயதில் சுருக்கமாக மகாபாரதம் படித்தது உண்டு. ஆனால் அது இத்தனை மாபெரும் காவியமா என்ற வியப்பில் ஆழ்த்தியது ஜமோ எழுத்து. படிக்கப் படிக்க அதை விட்டு வெளியே வர மனமில்லை. பாகம் 3 வண்ணக்கடல் படிக்க வேண்டும். Kindle பதிப்பு காணவில்லையே? ஏன்?