காதல் எப்படி வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானுலும் வரலாம் ..சாதி மதம் பணம் எதுவும் இல்லை அப்பா, அம்மா, வேண்டாதவர்கள் எதிர்த்தாலும் ஏற்று கொள்ளக்கூடியது காதல் ஆனால் சித்தி டூவில் ஒரே அநர்த்தமாகி இருக்கிறது .நம்பிக்கை நன்றி மீது துரோகம் பண்னி பண்ணும் வெண்பா கவின் காதல் ரசிக்க முடியாமல் வெறுப்பாக இருக்கிறது. எதிர்ப்பு வேறு இது அருவருப்பு .வெண்பா கேரக்டர் ஒரே எரிச்சல் .அதைவிட கவின் படித்த ஒரு கம்பெனி மேனேஜிங் டைரக்டர் கேரக்டரில் ஒரு இமேஜே வரவில்லை.. யாழினி என்ற கேரக்டர் கொடுமை காரி யாக படைத்து இருந்தால் கூட பரவாயில்லை இவர்கள் ரொமான்ஸ் பார்க்கும் போது ரசிக்க முடியவில்லை ..உங்கள் முதல் சீரியல் இருந்து இது வரை பார்த்ததில் இந்த மாதிரி எரிச்சல் வந்தது இல்லை நந்தினி மல்லிகா வில்லத்தனம் கூட அந்த கேரக்டருக்கு ஏற்ற நேர்மை உள்ளது அதைவிட தர்மா என்ற ஒரு அப்பா வளர்த்த மகளை இப்படியா ஒரு நிமிடத்தில் மறப்பார்... சித்திக்கு உண்மை தெரிய வரும் போது பயங்கரமான வெறுப்பை உதிர்த்தால் மட்டுமே தொடர்ந்து பார்க்க முடிவு செய்து இருக்கிறோம் வில்லிகளிடம் உள்ள நேர்மை இவர்களிடம் இல்லாதது சொதப்பல் ...ராதிகா அவர்களுக்காக இவ்வளவு நாள் பொறுத்து கொண்டோம்