அனைவர்க்கும் வணக்கம் என்னுடைய வாழ்நாளில் எந்த படத்தை பற்றியும் விமர்சனமோ, கருத்துக்களோ இதுநாள் வரை பதிவிட்டதில்லை. ஆனால் இன்று பதிவிட வேண்டிய கட்டாயத்தின் கரணம்? 'அருவி' ஒரு சிறிய சொல் ஆனால் அதன் பெயருக்கு ஏற்றவாறே பலமாகவும், இனிமையாகவும், சாரலாகவும் மனதை அக்ரமித்துக் கொண்டால். இந்த படத்திற்கு இதை விட வேறு சிறந்த தலைப்பு கிடைக்காது.... இன்றைய நடைமுறை வாழ்க்கையை பற்றிய அருவியின் அந்த ஒரு வாதம் போதும் நாம் அனைவருக்குமான சவுக்கடி. இன்று நாம் அனைவரும் மனிதத்தை தொலைத்து விட்டு ஒன்றுக்கும் உதவாத ஆனால் நம் எல்லோர் மனதையும் இது தான் இன்றைய தேவை என்று ஆக்ரமித்து இருக்கின்ற பணம் எனும் மாயைக்கு குடுக்கும் முக்கியத்துவம் கூட நமது மனதிற்கு கொடுப்பதில்லை... இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கையை நாம் வாழ முடியாத சூழலை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்... அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணுவதை எப்பொழுது நிறுத்தி விட்டு நமது வாழ்க்கையை நமக்காக, நமது மனது என்ன சொல்கிறதோ அதுபடி வாழும் பொழுது உண்மையான மனிதம் அதுவாகவே உயிர் விடும்..... மூன்றே வார்த்தைகளில் இந்த படத்தை பற்றி *அன்பு* *புரிதல்* *பகிர்தல்*. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய, உணர வேண்டிய படம் "அருவி" நன்றி D.குமாரசாமி@suresh