அட்டகாசமான ஒரு திரை அனுபவம் வேண்டுவோர் பார்க்க வேண்டியது. விர் விர் என சீரும் வாகனங்களும் வெடிக்கும் தெறிக்கும் துப்பாக்கி குண்டுகளும் உங்களை சற்றும் சோர்வடைய செய்யா ஒரு பாலைவன ஆக்ஷன் கவிதை இப்படம். மேக்ஸ் மற்றும் பியூரிஷா பாத்திரங்கள் உங்கள் மனதை விட்டு அகலாது இருக்கும். மஞ்சள் நிற பாலைவன டோன் , வேற லெவல் விசுவல்ஸ், தட தட திரைக்கதை . க்ராவிட்டி போல ஒரு திரை அனுபவம் வேண்டும் என்போர் ஒரு பயணம் மேக்ஸுடன் செல்லவும்