"காணெக்காணெ" போன்ற அற்புதங்களை படைத்து தொலைத்து நம் தூக்கத்தை கெடுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மலையாள படைப்பாளிகளை என்னதான் செய்வது...
ஒரே ஒரு வரி கிடைத்தால் கூட போதும். அதையே அழகிய திரைக்கதையாக மாற்றும் வல்லமை அவர்களுக்கு மட்டும் எப்படி வாய்க்கிறது..??
ஒரு மரணம் .... அது இருவருக்கு சௌகரியமாக மாறிவிட்டதோ என்ற ஒரு சந்தேகம். அதுவும் மகளை விபத்தில் பறி கொடுத்த தந்தைக்கு வந்துவிட்டால் அவன் எப்படி ரியாக்ட் செய்வான்..?
இந்த ஒற்றைக்கேள்வியை சுமந்து ஒரு சினிமா... அதற்குள் ஒரு வாழ்வியல்... கனத்துக்கொண்டே போகும் சந்தேகமும், அது ஊர்ஜிதம் ஆகும் சூழலும், அதன்பின் பழிவாங்க துடிக்கும் மனதும், பைபிள் சொல்லும் மன்னிப்பின் பெருந்தன்மையும் ஆகக்கடைசியில் வள்ளுவர் சொன்ன நன்னயம் செய்து அத்தனையும் விட்டுவிடலும்..
அதியற்புதமான நிதானமான சினிமா... நடிப்பின் எல்லைகளை தொட்டு திரும்பும் சுராஜ்வெஞ்சரமூடுவும் டொவினோதாமஸும் மற்றும் சிலரும்....
காணத்தவறாதீர்கள்...