Watched Aruvi 🎥 ...👌
மிக நீண்ட நாள் கழித்து மனத்தில் கனத்தை உணரச் செய்த படம். எங்கோ தொடங்கி எங்கோ முடியும் "typical cinema" அல்ல இது, அருவி போலே சுனையிலே தொடங்கி பேராழியிலே கலக்கும் அருவி. கமர்சியல் முலாம் பூசி பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பினும் அருவியை நாம் அவ்வளவு எளிதாய் தவிர்த்துவிடலாகாது. பெரிய மேதைகள், cult படைப்பாளிகள் என எத்தனை எத்தனையோ பேரினால் இன்றும் தமிழ் சினிமா தடம் புரளாமல் காப்பாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. அவர்களால் நுன்னிய குறைகளைக் கூட காண முடியும், ஆனால் என்னுடைய கண்ணோட்டத்தில் படத்தில் எவ்வித குறையும் இருப்பதாய் தெரியவில்லை. அவர்களுக்கு இந்த சிறியவனின் ஒரே சிறிய வேண்டுகோள், இது குறைகளைக் கண்டறிந்து களைய வேண்டிய படைப்பல்ல, எந்தவொரு அன்னியதன்மையும் அற்ற கொண்டாடப்பட வேண்டிய படைப்பு.
It's purely a product that should get praised and be celebrated...
Time to celebrate....
I'm very thankful to the creator for this feel good movie for the evolving Tamil cinema...
Love you Aruvi,
DK