இந்த சீரியலில் நான் சில விஷயங்களை குறிப்பிடுகிறேன் பின்பு நீங்களே சொல்லுங்க ஒரு வழக்கறிஞர் இந்த அளவுக்கு முட்டாளாக இருக்க மாட்டார், காவல்துறை அதிகாரிகளின் கையாலாகாத தனத்தை அற்புதமாக காட்டியுள்ளார், நல்லவர்கள் எப்போதும் நாசமாகப் போவார்கள் கேடு கெட்டவர்கள் அற்புதமாக வாழ்வார்கள் என்று, இது சீரியல் எழுதியவரின் மனநிலையோ இல்லை இந்த சமூகத்தில் நல்லவர்களின் நிலை இதுதானா, ஏதோ ஒரு விதத்தில் மக்களை முட்டாள்களாக ஆக்குவதில் மட்டும் தெளிவாக நடக்கிறது பாவம் வீட்டில் சீரியல் பார்க்கும் பெண்களின் பரிதாப நிலையை கண்டால் இந்த சீரியல்களை பார்த்து பல வியாதிகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்இது இந்த சீரியலின் 2,3 எபிசோடுகள் பார்த்ததினால் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் ஏற்றுக் கொள்பவர்கள் சரி ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவர்களது தலையெழுத்து நாம் எதுவும் செய்ய முடியாது