மைக் மோகன் என்று பிரபலமாக அறியப்பட்ட மோகன், அவரது முந்தைய படங்களில் பெரும்பாலும் இசைஞானி இளையராஜா கைவண்ணத்தில் உருவான மிகச் சிறந்த மெல்லிசைப் பாடல்களின் உதவியாலும், பிரபல டப்பிங் கலைஞரான எஸ் என் சுரேந்தரின் சிறந்த பின்னணி குரலாலும் மோகன் உண்மையில் தனது புகழைப் பெற்றார். உண்மையைச் சொன்னால், மோகனுக்கு நல்ல நடிப்புத் திறமை என்றுமே இருந்ததில்லை.
இளையராஜாவின் இசை மற்றும் எஸ்.என்.சுரேந்தரின் குரலால் மோகன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனதால் அவர் "சில்வர் ஜூபிலி ஹீரோ" என்று அறியப்பட்டார். அதுமட்டுமின்றி அந்த காலத்து பிரபல ஹீரோயின்களான ரேவதி, அமலா, நதியா, ராதா, அம்பிகா என பலருடன் ஜோடியாக நடித்தார்.
இளையராஜாவின் இசையில்லாமலும், எஸ்என் சுரேந்தரின் குரல் இல்லாமலும், பிரபலமான கதாநாயகி இல்லாமலும், மோகன் ஒரு பெரிய ஜீரோ என்பதை நிரூபிக்கிறது ஹரா திரைப்படம் பப்படம் ஆனதற்கு மோகனின் கவனக்குறைவான நடிப்பு, பரிதாபமான ஆக்ஷன் காட்சிகள், மோசமான திரைக்கதை மற்றும் தெளிவற்ற இயக்கம்......எல்லாவற்றிற்கும் மேலாக, பெரிய தாடி மற்றும் காந்தி கண்ணாடியுடன் மோகனின் தோற்றம் உண்மையில் எரிச்சலூட்டுகிறது.