காடும் மலையும் மரங்களும் செடிகளும் கொடிகளும் இயற்கை தாயின் வரம் என்று மார்தட்டிக் கொள்ளும் நாமெல்லாம் அவ்விடம் வாழும் மனிதர்களை மனிதர்களாகவே கூட எண்ண முன் வருவது இல்லை.
இன்னும் இன்றைய காலகட்டத்தில் கூட இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இந்த சமூகத்தில் சட்டத்தில் எல்லா உரிமையும் இருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக கூறுகிறது இந்த ஜெய்பீம் திரைப்படம்.
எவ்வளவு நடந்தாலும் எங்க ஆளுங்களுக்கு பட்டா கிடைக்கிறது இல்ல
முதல்ல படிங்க அப்புறம் எல்லாம் தானா கிடைக்கும்
பாம்பு புடிக்க வேண்டாம்னு தான் படிக்கணும்னு ஆச படுறோம்
திருடன் இல்லாத சாதி இருக்கா? எல்லா சாதியிலும் தான் பெரிய பெரிய திருடன் இருக்கான் போன்ற வசனங்கள் உண்மையில் சவுக்கடி போல விழுகிறது.
பல நூற்றாண்டுக்கு முன்னர் வீல் வீரர்களாக இருந்தவர்கள் தான் இப்ப கொத்தடிமைகளாக வாழ்றாங்க
நிச்சயம் பார்க்க வேண்டிய படம். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூர்யா பிரகாஷ் ராஜ் மேலும் படக் குழுவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.