தங்கலான் ஒரு அருமையான கலை படைப்பு.
பா.ரஞ்சித் - விக்ரம் - ஜி்வி பிரகாஷ் கூட்டணியில் வந்த தமிழர்களின் பெருமை !
இயல்பான வசனங்கள், அந்த காலகட்டதில் இருந்த சமூக ஏற்றத்தாழ்வு, பூர்வ குடி மக்களின் வாழ்வியலை சமரசம் இன்றி பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.
விக்ரம் நடிப்பு நமக்கு பிரமிப்பை தருகிறது. பல தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பு வீன் போகவில்லை !
ராமனுஜர் அவர்கள் ஏற்ற தாழ்வை ஒழிக்க எடுத்த முயற்ச்சி காட்சிபடுத்தப்பட்ட விதம் அருமை!
பூர்வ குடி நாகர் இன மக்கள் பற்றி இதுவரை எந்த தமிழ் படமும் காட்டாத பரிமாணம்.
குழந்தைகளுடன் படம் பார்க்க இயலாது! வன்முறை காட்டிகளின் நீளம் குறைக்கப்பட்டருக்கலாம்.
திரைக்கதை இன்னும் மெருகேற்றி் இருக்கலாம். இசை சில இடங்களில் இரைச்சல். லைவ் சின்க் தொழில்நுட்பத்தில் வசனம் நிறைய இடங்களில் தெளிவில்லை.
கண்டிப்பாக திரை அரங்கிள் பார்க்க வேண்டிய தமிழர்களின் கலை பொக்கிஷம் !