வாழ வேண்டும் உழைத்து என்ற தனிப்பெரும் கருத்திற்குள், தன்மானம் எழுந்து இருக்கும்.
கூட்டிக் கழித்து இது இப்படித்தான் என்று யாருடைய வாழ்க்கையும் வரையறுத்து விட முடியாது என்பதால், இந்த வாழைத் தோட்டத்தைச் சுற்றியும் அவிழாத முடிச்சுகள்..
சுமை,
வலி,
மருதாணி,
பசு,
விபத்து என்று
இறுதியாகச்
சோறு...
பசித்தவனுக்கு என்ன சோகம் இருந்து விடப் போகிறது என்று பசிக்காதவனுக்குத் தெரியாமல் இருந்து விடுவதால். சிலருக்கு இது புரியாமலும் இருக்கலாம்.
காட்சிகள் பசுமையாக இருந்தும் வறட்சியாக இருக்கும் வாழ்க்கைக்குள் சுமை தூக்கும் படலங்களில் உடலின் வலியை விட அந்த நிகழ்வுகளின் சோகத்தின் வலி அதிகமாகக் கனக்கிறது.
பழுக்க வைக்கும் முன் வாழையை வெப்பத்திற்குள் வைக்கும் படலமாய், குளிர்சாதன திரையரங்கத்திலும் வேர்த்துத் தான் பார்த்தேன்.
வாழை, வாழட்டும்,
வாழ்த்துக்கள்...