#KGF .. வரலாற்று நாயகர்களை நாம் நேரில் பார்த்ததில்லை அவர்களின் பராக்கிரமங்கள், சாகசங்கள் என அனைத்தும் காலங்காலமாக நமக்கு மிகைபடுத்தி கூறபட்டவைகளே...
படத்தை கவனித்து பார்த்தீர்கள் என்றால் படத்தில் எந்த இடத்திலும் ராக்கி பாயின் கதையை எந்த ஒரு இடத்திலும் நேரடியாக காட்டியதேயில்லை... நமக்கு காட்டப்படும் கதைகள் அனைத்தும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் (narrators) கண்ணோட்டங்களே. அந்த கதாபாத்திரங்களின் மனதில் பதிந்த சம்பவங்களின் கோர்வைகளே.
நிஜத்தில் அக்காலங்களில் இந்த நாயகர்கள் உயரமா? குள்ளமா? எதுவும் நமக்கு தெரியாது பெரும்பாலும் இவை அனைத்தும் துதி போற்றல்களாகவே இருக்கும். அதே போல் கே.ஜி.எப் முழுவதும் ராக்கியின் கதையை வெவ்வேறு கதாபாத்திரங்கள் கதை போல் கூறுவார்கள்.
ஒரு கதை என்ற எண்ண ஓட்டத்தில் இருந்து மீளாமல் பார்த்துக்கொண்டு சுவாரசியத்தை அதிகமாக்கி விடுவார் பிரசாந்த் நீல்.
ஒரு கதை பரவ பரவ அதன் மிகைபடுத்தல் பன்மடங்கு பெருகத்தான் செய்யும்...
கே.ஜி.எப் என்ற கதையும் அப்படியே கூறப்பட்டது.
KGF is a story tale told about a hero by the people who has influenced to the core.
- Nivedha Murugesan
PS: benefits of doing #wfh .. take your laptop to the theatre and watch the movie😝