அருவி - என்ன review எழுத இந்த படத்த பத்தினு சத்தியமா ஒண்ணும் புரில..அருவியைப்போலவே எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடைத்திட முடியாத படம் இது.. படத்துலயே ஒரு வசனம் வரும், "நீங்களாம் என்ன படமாடா எடுக்குறீங்க"னு.. அது சரிதான்னு படம் முடிஞ்சு வெளிய வர்றப்ப உணர்ந்தேன்.. அதுலயும் அந்த கடைசி 15 நிமிஷம் கலங்கடிச்சுட்டாங்க. இந்த படத்துக்கெல்லாம் Review stars எல்லாம் போட நான் விரும்பல.. இது அவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொருவரும் தவறாமல் தியேட்டர் போய் பார்த்து கொண்டாட வேண்டிய படம்.. எவனாச்சும் உலகசினிமா அது இதுனு சொல்லிட்டு நம்மகிட்ட வந்தா, "உலகத்துக்கான எங்கள் தமிழ்சினிமா இதுடா "னு மார்தட்டி பெருமையா காட்டலாம்... படத்த பாத்துட்டு நாம சிந்துற ஒவ்வொரு துளி கண்ணீரும் , எந்த தப்பும் செய்யாம , இங்க இன்னமும் மரணத்தோட போராடி வாழ்ந்துகிட்டு இருக்குற ஆயிரமாயிரம் அருவிகளுக்கும், பேரன்பை மட்டுமே அள்ளிக்கொடுக்கும் தோழிகள் எமிலிகளுக்கும் சமர்ப்பணம்.. Hats off to the entire team of Aruvi...என் வாழ்வில் பார்த்த மிகச்சிறந்த படம் இது தான்..