Mahamuni..
One of the finest movie which I got impressed in this decade..
ஆர்யாவெல்லாம் மனுஷன் அப்படியே வாழ்ந்து இருக்கான்.. அவன் மனைவி கேரக்டர் இந்துஜா இன்னொரு கேரக்டர் மஹிமா,
இளவரசு , அவரின் எடுபிடி மச்சான் நடிகர் ,பணக்கார அப்பா ஜெயப்பிரகாஷ் என தொடங்கி இன்ஸ்பெக்டர் நடிகர் தேர்வு வரை எல்லாமே உண்மையான மனிதர்கள் பின்னால் கேமரா வைத்தது போலவே இருக்கிறது கதாபாத்திரமும் அவர்கள் நடிப்பும்..
மிகப்பெரிய ட்விஸ்ட் ஏதும் இல்லாமல் ஒரே ஒரு ட்விஸ்டை வைத்துக் கொண்டு, அதை கணிக்க முடியாத அளவு,
லீனியராக கதை சொல்லும் படத்தை பல வருடங்களுக்கு பின் பார்க்கிறேன்..
மௌனகுரு இயக்குனர் சாந்தகுமார் மிக அற்புதமான இயக்கம்.. டிக்டாக் சாதி வீடியோ, அண்டா திருடிய காவி கும்பல், பெரியாரிசம், ஆன்மீகம் , சாதிவெறி உள்ள உட்கிராம பணக்கார மனிதர்கள், என எல்லாவற்றையும் சரிசமமாக பேசும் திறன் உள்ள இயக்குனர்.
ஆர்யாவிற்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ.. மிக நல்ல நடிகன் என்கிற அங்கீகாரம் கிடைக்கும்..
மகாமுனி - ரொம்ப ரொம்ப நல்ல படம் பார்த்த திருப்தி💐💐💐💐