செல்ல மகளுக்கு எதிர்பாராது, என்னமோ, எப்படியோ எச்ஐவி பாசிடீவ் எனப்படும் எய்ட்ஸ் நோய். பாசதந்தை உள்ளிட்ட ஓட்டு மொத்த வீடும் அவரை தப்பாய் பேசி வெறுத்து ஒதுக்க., வீட்டை விட்டு வெளியேறும் அம்மணிக்கு அந்த நோய் இருப்பது தெரியாமல் அடைக்கலம் தர முன்வந்த தோழியின் தந்தை, ஆன்மீக உபன்யாசர், தையல் வேலை தந்த முதலாளி என மூவர் அந்த இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாட, அந்த சொந்த கதை, சோகக்கதையை "சொல்வதெல்லாம் சத்தியம்" எனும் ஒரு பிரபல டி.வி.யின் ரியாலிட்டி ஷோவில் சொல்லப் போன இடத்தில் அந்த மீடியாவும், அதை சார்ந்தவர்களும் அவர் வாழ்க்கையில் விளையாட முயற்சிப்பதை உடனடியாக புரிந்து கொள்ளும் நாயகி, அதற்கு பதிலடியாக, பழிக்கு பழியாக செய்யும் காரியத்தின் விளைவாக அவரை தீவிரவாதியாக கருதி தணடிக்க பார்க்கிறது சமூகமும், அரசாங்கமும். அவற்றுக்கு தான் தீவிரவாதி அல்ல.... அன்புக்கும், நல் அடைக்கலத்திற்கும் ஏங்கும் தீவிர நோயாளி... என்பதை அந்த அபலைப் பெண் எப்படி புரிய வைக்கிறார்? என்பது தான் "அருவி "