லெனின் பாரதி அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.எவ்வளவு அடிச்சாலும் ஒரு விவசாயி தாங்குவான் என்பதற்கு ரங்கசாமி, விவசாயியாகவே வாழ்ந்துள்ளார்.தனது ஆசை கனவுகளை கூட பெரிதாக வெளிக்காட்டாத கிராமத்துவாசியாக எதார்த்தமாக நடித்துள்ளார்.படத்தின் நாயகி தனது கல்யாண விருப்பத்தை சீனி சரியா இருக்கா என்று கேட்டு நமக்கு புரிய வைப்பது அழகு,7கற்களுக்கு பொட்டு வைத்து சாமியாக்கி படையல் வைத்து கும்பிடுவது அழகு,
கும்பிட வந்தவனே பின்னாளில் நிலத்தை அபகரிப்பது கொடுமை.மூட்டை சுமப்பவரின் தன்னம்பிக்கையும், தன்மானமும் ,விடா முயற்சியும்,நம் கிராமத்து முன்னோர்களை ஞாபகப்படுத்தியதுஅவரின் இருமல் சத்தம் இதயத்தை கனமாக்கிவிட்டது. பத்திரப்பதிவு முன்பாகவே மஞ்சள் பையில் பணத்தை வைத்துவிட்டு போவது .மனித நம்பிக்கை இப்போது விவசாயத்தை விட அழிந்து விட்டதை உணர்த்தியுள்ளது.