கமலஹாசன் ஐயா அவர்களே!
தாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தொலைக்காட்சித் தொடரில் நடிப்புத் துறை
சார்ந்த நபர்களை மட்டுமே தான் தெரிந்தெடுத்து பங்குபெறச் செய்வீர்களா?
உண்மையான சுவாரஸ்யம் இத் தொடரில் இடம்பெற வேண்டுமெனில் உலகின் கடைநிலை
அர்ப்பன் என கருதப்படும் முகம் தெரியாத ஒரு சாமானியன் இதில் இடம் பெற்றால் (அடுத்த வேளை கஞ்சிக்கு பாடுபடும் ஏழை - அவன் தான் தனக்கென சேர்த்துவைத்த 100 ரூபாயைக் கூட
தன் தானைத் தலைவன் (பிக் பாஸ் ) என ரசிக்கும் உங்களுக்குக் கொடுப்பவன்.) உம்முடைய பிரபலங்களும் தார்மிக பிரசித்தி அடைவார்கள்.
வாய்ப்பை சாமானியன் பக்கம் உங்களால் திருப்பக் கூடுமா?
யாவும் பரமயம்! யாவும் பரமார்ப்பணம் !!