சுவையான திருப்பங்கள், காட்சிகளின் மூலம் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். பெற்றோரைத் தேடிச் செல்லும் பரத்தின் பயணத்தினூடே இன்றைய யதார்த்தத்தையும் கிருத்திகா பதிவு செய்கிறார். பாத்திரங்கள், வசனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தின் சஸ்பென்ஸைக் காப்பாற்றி அலுப்பில்லாமல் கொண்டு செல்கிறார். சமகால அரசியல் பகடி பொருத்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்புகள் பற்றியும், அதனால் 90களில் ஏற்பட்ட விளைவுகள், தற்போதும் அது எப்படி நிலவுகிறது என்பதை எல்லாம் கதைப் போக்கை மீறாமல் பேசியிருப்பது பாராட்டத்தக்கது. பெண்ணை அடக்கியாளும் போக்கையும் கிருத்திகா பொருத்தமான விதத்தில் காட்டியிருக்கிறார்.
தமிழகத்தில் இன்றைக்கும் தொடர்ந்துவரும் தீண்டாமையைச் சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் விமர்சனக் கண்ணோட்டத்துடன் கையாண்டிருக்கும் கிருத்திகாவுக்குப் பாராட்டுகள்.