விறு விறுப்பு இல்லாத திரைக்கதை, ஒவ்வொரு காட்சியிலும் கதை ஒவ்வொரு மாதிரி தோன்றுகிறது, தன்னை கமர்ஷியல் ஹீரோவாக காட்ட சொல்லி காட்சிகளை சிகா மாற்ற சொல்லி இருப்பார் போல தெரிகிறது... லிங்கா படம் பார்க்கும் போது ஒரு கட்டத்தில் நமக்கு ஏற்படும் வெறுப்பு போலவே இதிலும்..
கதை காட்சி அமைப்புகள் நன்றாக இருந்தால் மட்டுமே ஹீரோயிசம் பில்டப் எல்லாம் எடுபடும்..
இல்லேயேல் வெறுப்பு தான்.
இமானை எதற்கு இன்னும் நம்புகிறார்கள் என தெரியவில்லை,
துல்லியமான இசை இல்லை..
நடிகருக்கு ஏற்றது போல் குரல் தேர்வு இல்லை, நல்ல பாடல்களை ஆர்கெஸ்ட்ரா குழுவினர் கெடுப்பது போல எங்கயோ கேட்ட பாடலை இமான் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் கெடுத்து உள்ளனர்..
படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் விட்ட குறை தொட்ட குறையாக முழுமை பெறாமல் உள்ளது..
கமர்ஷியல் ஹுரோ ஆக வேண்டும் என்றால் மிக மிக கவனமாக கதையை தேர்வு செய்ய வேண்டும், உடலை தயார் செய்ய வேண்டும்,
சுத்தமாக சிகாவிற்கு சண்டை காட்சிகளில் நடிக்க தெரியவில்லை,
விஷாலின் சண்டைக்கோழி படம் சண்டை காட்சிகளுக்காகவே வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் சாப்ட் ஹீரோவாக நடித்த விஜய் ஆக்ஷன் சூட்டுக்கு மாறும் போது அவரின் உடல் மொழி மிகவும் மாறி இருக்கும்,
சுறுசுறுப்பாக தனது உடலுக்கு ஏற்றவாறு சண்டை காட்சிகளில் நடித்தார்..
விக்ரமும் அப்படி தான்..
ஆரம்ப காலத்தில் உங்கள் படங்களை பார்க்கும் போது அட பரவாயில்லையே என தோன்றிய எங்களுக்கு இப்போது நீங்களும் வழக்கமான பாதையில் போகிறதாக தெரிகிறது