JOJI மலையாள திரைப்படம் இந்திய சினிமாவில் அற்புதமான noir ஆக வெளியாகியுள்ளது, ஷேக்ஸ்பியரின் Macbeth ஐ தழுவியது என்று நன்றி கார்ட் வருகிறது,
Coen சகோதரர்களின் அவல நகைச்சுவை பொருந்திய crime noir திரைப்படமான "The Man Who Wasn't There" (2001) திரைப்படம் போன்ற நேர்த்தி கைகூடிய மற்றும் ஒரு Dark humour cocktail,
தரத்திற்கு வேண்டி இப்படத்தை குறிப்பிட்டேன், அது முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை,இது அட்டகாசமான வண்ணம்.
அங்கு Billy Bob thornton செய்த சவரத்தொழிலாளி கதாபாத்திரம் கிடைக்கப்போகும் பெரும்பணத்துக்கு வேண்டி ஆப்பசைத்துவிட்டு சட்டத்தின் பிடியில் புஷ்பம் போல் சிக்கி அல்லல் உரும் கதாபாத்திரம்,
அத்தனை சுய எள்ளல்,அத்தனை பேராசை, அத்தனை வில்லத்தனம்,அத்தனை கல்லுளிமங்கத்தனம், இதில் அப்படி ஒரு கதாபாத்திரத்தை தன் பாணியில் அனாயசமாய் செய்திருக்கிறார் ஃபஹத் ஃபாஸில் என்ற மகத்தான கலைஞன்.
இயக்குனர் திலீஷ் போத்தன் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி, காட்சிக்கு காட்சி perfection கொண்டு வருகிறார், மூன்று திரைப்படங்கள் தனித்துவமாக ,அதுவும் வெவ்வேறு genre ல் இத்தனை தரமாக தந்திருக்கிறார்.
திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள், அமேஸான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது, ஒளிப்பதிவு, இசை எல்லாம் அத்தனை தரமாக உள்ளது,reference material போன்ற கோயன் சகோதரர்கள் தரம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல கொரோனா சமயத்தில் அதையும் சமகால noir கதைக்குள் கொண்டு வந்து களமிறங்கியுள்ளனர், சாதாரணமாக ஒரு அசாதாரணம், பரபரப்பாக எதையும் செய்துவிடுதல் எளிது, ஆர்ப்பாட்டமின்றி ஒரு நேர்த்தியான crime noir த்ரில்லர் எடுத்து அசரடிப்பது எளிதல்ல.