மிக நல்ல கதைக்களம். வழக்கமான கதைகளை தவிர்த்து ஒரு வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டுக்கள்.
கதை சொல்ல வரும் கருத்தை கடைசியில் வரும் பாடல் தான் அழுத்தமாக சொல்கிறது. திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் பின்னணி இசைஆகியவை கதையின் வீச்சை நீர்த்து போக வைத்து விடுகிறது. கதிரின் நடிப்பு இன்னும் சரியாக வந்திருக்க வேண்டும். குறிப்பாக நண்பன் இறந்த பின் அவரின் நடிப்பு TV சீரியல் நடிகர்களை விட குறைவாக இருப்பதாக நினைக்கிறேன். ரித்விகா கச்சிதமான நடிப்பில் உள்ளத்தை அள்ளி விட்டார். வாழ்த்துக்கள்.
காட்சிகள் நீளமாகவும் கதை நகர்வு மிக மந்தமாகவும் உள்ளது. இந்த படத்தை ராட்சசன் படத்தோடு ஒப்பிட்டு பேசி இருந்தனர். ராட்சசன் படம் இதை விட ஒப்பிட முடியாத அளவுக்கு மிகச்சிறந்த படம் என்பது என் தாழ்மையான கருத்து.